வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

எண்: 546
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: செங்கோன்மை (The Right Sceptre)
இயல்: அரசியல் (Royalty)

மு.வரதராசனார்: ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

சாலமன் பாப்பையா: ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.

மு.கருணாநிதி: ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்