எண்: 1245
பால்: காமத்துப்பால் (Love)
அதிகாரம்: நெஞ்சொடு கிளத்தல் (Soliloquy)
இயல்: கற்பியல் (The Post-marital love)
மு.வரதராசனார்: நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியுமோ?
சாலமன் பாப்பையா: நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?
மு.கருணாநிதி: நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?