யனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.

எண்: 994
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: பண்புடைமை (Courtesy)
இயல்: குடியியல் (Miscellaneous)

மு.வரதராசனார்: நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.

சாலமன் பாப்பையா: நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

மு.கருணாநிதி: நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்