எண்: 99
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: இனியவை கூறல் (The Utterance of Pleasant Words)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
சாலமன் பாப்பையா: பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?
மு.கருணாநிதி: இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?