எண்: 94
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: இனியவை கூறல் (The Utterance of Pleasant Words)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
சாலமன் பாப்பையா: எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
மு.கருணாநிதி: இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை