எண்: 895
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை (Not Offending the Great)
இயல்: நட்பியல் (Friendship)
மு.வரதராசனார்: மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.
சாலமன் பாப்பையா: பகைவர்க்குக் கடும் வலிமை காட்டும் ஆட்சியாளரால் கோபிக்கப்பட்டவர், ஆட்சியாளருக்கு அஞ்சி, எங்கே போனாலும் எங்கும் வாழ முடியாது.
மு.கருணாநிதி: மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது