எண்: 889
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: உட்பகை (Enmity within)
இயல்: நட்பியல் (Friendship)
மு.வரதராசனார்: எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
சாலமன் பாப்பையா: எள்ளின் பிளவு போல உட்பகை சிறியதாக இருக்கலாம்; என்றாலம் உட்பகை உள்ள கட்சிக்குள்ளேயே அதன் கேடும் இருக்கிறதாம்.
மு.கருணாநிதி: எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்