எண்: 886
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: உட்பகை (Enmity within)
இயல்: நட்பியல் (Friendship)
மு.வரதராசனார்: ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.
சாலமன் பாப்பையா: தன்னுடன் இருப்பவரின் பகை தோன்றுமானால், ஆட்சியின் அழிவைத் தடுக்க ஒருபோதும் முடியாது.
மு.கருணாநிதி: ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்