எண்: 885
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: உட்பகை (Enmity within)
இயல்: நட்பியல் (Friendship)
மு.வரதராசனார்: உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா: உறவு முறையை உடையவனே ( சொந்தக் கட்சிக்காரனே) உட்பகையானால், அது சாவோடு கூடிய குற்றம் பலவற்றையும் உண்டாக்கும்.
மு.கருணாநிதி: நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்