எண்: 844
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: புல்லறிவாண்மை (Ignorance)
இயல்: நட்பியல் (Friendship)
மு.வரதராசனார்: புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.
சாலமன் பாப்பையா: அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.
மு.கருணாநிதி: ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்