அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

எண்: 764
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: படை மாட்சி (The Excellence of an Army)
இயல்: படையில் (The Excellence of an Army)

மு.வரதராசனார்: (போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

சாலமன் பாப்பையா: போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.

மு.கருணாநிதி: எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்