எண்: 753
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: பொருள் செயல்வகை (Way of Accumulating Wealth)
இயல்: கூழியல் (Way of Making Wealth)
மு.வரதராசனார்: பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்
சாலமன் பாப்பையா: பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.
மு.கருணாநிதி: பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது