நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

எண்: 739
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: நாடு (The Land)
இயல்: அரணியல் (The Essentials of a State)

மு.வரதராசனார்: முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

சாலமன் பாப்பையா: தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதிக உற்பத்தியைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்திப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

மு.கருணாநிதி: இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்