எண்: 7
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: கடவுள் வாழ்த்து (The Praise of God)
இயல்: பாயிரவியல் (Prologue)
மு.வரதராசனார்: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது
சாலமன் பாப்பையா: தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்
மு.கருணாநிதி: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை