எண்: 670
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: வினைத்திட்பம் (Power in Action)
இயல்: அமைச்சியல் (Minister of State)
மு.வரதராசனார்: வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
சாலமன் பாப்பையா: எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.
மு.கருணாநிதி: எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது