எண்: 67
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: மக்கட்பேறு (The Wealth of Children)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
சாலமன் பாப்பையா: தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.
மு.கருணாநிதி: தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்