எண்: 66
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: மக்கட்பேறு (The Wealth of Children)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா: பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.
மு.கருணாநிதி: தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்