எண்: 642
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: சொல்வன்மை (Power of Speech)
இயல்: அமைச்சியல் (Minister of State)
மு.வரதராசனார்: ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்
சாலமன் பாப்பையா: அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக.
மு.கருணாநிதி: ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்