எண்: 640
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: அமைச்சு (The Office of Minister of state)
இயல்: அமைச்சியல் (Minister of State)
மு.வரதராசனார்: (செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.
சாலமன் பாப்பையா: செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.
மு.கருணாநிதி: முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்