எண்: 623
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: இடுக்கண் அழியாமை (Hopefulness in Trouble)
இயல்: அரசியல் (Royalty)
மு.வரதராசனார்: துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
சாலமன் பாப்பையா: வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.
மு.கருணாநிதி: துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்