எண்: 616
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: ஆள்வினை உடைமை (Manly Effort)
இயல்: அரசியல் (Royalty)
மு.வரதராசனார்: முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.
சாலமன் பாப்பையா: முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.
மு.கருணாநிதி: முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்