மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

எண்: 602
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: மடி இன்மை (Unsluggishness)
இயல்: அரசியல் (Royalty)

மு.வரதராசனார்: தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா: தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.

மு.கருணாநிதி: குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்