உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

எண்: 592
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: ஊக்கம் உடைமை (Energy)
இயல்: அரசியல் (Royalty)

மு.வரதராசனார்: ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.

சாலமன் பாப்பையா: மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.

மு.கருணாநிதி: ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது