எண்: 58
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் (The Worth of a Wife)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
சாலமன் பாப்பையா: பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.
மு.கருணாநிதி: நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்