எண்: 563
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: வெருவந்த செய்யாமை (Absence of Terrorism)
இயல்: அரசியல் (Royalty)
மு.வரதராசனார்: குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.
சாலமன் பாப்பையா: குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.
மு.கருணாநிதி: குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்