எண்: 54
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் (The Worth of a Wife)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?
சாலமன் பாப்பையா: கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?
மு.கருணாநிதி: கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?