தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

எண்: 509
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: தெரிந்து தெளிதல் (Selection and Confidence)
இயல்: அரசியல் (Royalty)

மு.வரதராசனார்: யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

சாலமன் பாப்பையா: எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.

மு.கருணாநிதி: நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது