எண்: 484
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: காலமறிதல் (Knowing the fitting Time)
இயல்: அரசியல் (Royalty)
மு.வரதராசனார்: (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
சாலமன் பாப்பையா: ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.
மு.கருணாநிதி: உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்