எண்: 459
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: சிற்றினம் சேராமை (Avoiding mean Associations)
இயல்: அரசியல் (Royalty)
மு.வரதராசனார்: மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
சாலமன் பாப்பையா: ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.
மு.கருணாநிதி: நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்