எண்: 436
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: குற்றங்கடிதல் (The Correction of Faults)
இயல்: அரசியல் (Royalty)
மு.வரதராசனார்: முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.
சாலமன் பாப்பையா: முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!
மு.கருணாநிதி: முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?