எண்: 431
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: குற்றங்கடிதல் (The Correction of Faults)
இயல்: அரசியல் (Royalty)
மு.வரதராசனார்: செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.
சாலமன் பாப்பையா: தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.
மு.கருணாநிதி: இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்