எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.

எண்: 426
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: அறிவுடைமை (The Possession of Knowledge)
இயல்: அரசியல் (Royalty)

மு.வரதராசனார்: உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா: உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

மு.கருணாநிதி: உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்