அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

எண்: 421
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: அறிவுடைமை (The Possession of Knowledge)
இயல்: அரசியல் (Royalty)

மு.வரதராசனார்: அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும்.

சாலமன் பாப்பையா: அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை.

மு.கருணாநிதி: பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்