எண்: 419
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: கேள்வி (Hearing)
இயல்: அரசியல் (Royalty)
மு.வரதராசனார்: நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
சாலமன் பாப்பையா: நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.
மு.கருணாநிதி: தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது