கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

எண்: 418
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: கேள்வி (Hearing)
இயல்: அரசியல் (Royalty)

மு.வரதராசனார்: கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

சாலமன் பாப்பையா: கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

மு.கருணாநிதி: இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்