எண்: 408
பால்: பொருட்பால் (Wealth)
அதிகாரம்: கல்லாமை (Ignorance)
இயல்: அரசியல் (Royalty)
மு.வரதராசனார்: கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.
சாலமன் பாப்பையா: படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.
மு.கருணாநிதி: முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்