எண்: 370
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: அவா அறுத்தல் (Curbing of Desire)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)
மு.வரதராசனார்: ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.
சாலமன் பாப்பையா: ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.
மு.கருணாநிதி: இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்