எண்: 365
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: அவா அறுத்தல் (Curbing of Desire)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)
மு.வரதராசனார்: பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.
சாலமன் பாப்பையா: ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.
மு.கருணாநிதி: ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்