எண்: 354
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: மெய்யுணர்தல் (Truth-Conciousness)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)
மு.வரதராசனார்: மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
சாலமன் பாப்பையா: மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.
மு.கருணாநிதி: உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை