எண்: 33
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: அறன் வலியுறுத்தல் (Assertion of the Strength of Virtue)
இயல்: பாயிரவியல் (Prologue)
மு.வரதராசனார்: செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா: இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.
மு.கருணாநிதி: செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்