எண்: 320
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: இன்னா செய்யாமை (Not doing Evil)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)
மு.வரதராசனார்: துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
சாலமன் பாப்பையா: செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.
மு.கருணாநிதி: தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது