எண்: 315
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: இன்னா செய்யாமை (Not doing Evil)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)
மு.வரதராசனார்: மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
சாலமன் பாப்பையா: அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?
மு.கருணாநிதி: பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை