எண்: 31
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: அறன் வலியுறுத்தல் (Assertion of the Strength of Virtue)
இயல்: பாயிரவியல் (Prologue)
மு.வரதராசனார்: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
சாலமன் பாப்பையா: அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?
மு.கருணாநிதி: சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?