
எண்: 290
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: கள்ளாமை (The Absence of Fraud)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)
மு.வரதராசனார்: களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.
சாலமன் பாப்பையா: திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.
மு.கருணாநிதி: களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது