எண்: 287
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: கள்ளாமை (The Absence of Fraud)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)
மு.வரதராசனார்: களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா: உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.
மு.கருணாநிதி: அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது