களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

எண்: 284
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: கள்ளாமை (The Absence of Fraud)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)

மு.வரதராசனார்: களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா: அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

மு.கருணாநிதி: களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்