கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.

எண்: 279
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: கூடா ஒழுக்கம் (Imposture)
இயல்: துறவறவியல் (Ascetic Virtue)

மு.வரதராசனார்: நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா: வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.

மு.கருணாநிதி: நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும் வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும் அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்