எண்: 26
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: நீத்தார் பெருமை (The Greatness of Ascetics)
இயல்: பாயிரவியல் (Prologue)
மு.வரதராசனார்: செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.
சாலமன் பாப்பையா: பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.
மு.கருணாநிதி: பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்