எண்: 227
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: ஈகை (Giving)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)
மு.வரதராசனார்: தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
சாலமன் பாப்பையா: பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.
மு.கருணாநிதி: பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை