தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

எண்: 202
பால்: அறத்துப்பால் (Virtue)
அதிகாரம்: தீவினையச்சம் (Dread of Evil Deeds)
இயல்: இல்லறவியல் (Domestic Virtue)

மு.வரதராசனார்: தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

சாலமன் பாப்பையா: நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

மு.கருணாநிதி: தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்